தாத்தா இருவரும் ஸ்டிரிக்ட்; இவர் படுசுட்டி! - வைரலாகும் சந்திரபாபு நாயுடுவின் பேரன் புகைப்படங்கள் | Andhra Pradesh CM Naidu’s grandson pictures goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (21/03/2018)

கடைசி தொடர்பு:17:49 (21/03/2018)

தாத்தா இருவரும் ஸ்டிரிக்ட்; இவர் படுசுட்டி! - வைரலாகும் சந்திரபாபு நாயுடுவின் பேரன் புகைப்படங்கள்

சந்திரபாபு நாயுடு பேரன்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன் பேரனின் பிறந்தநாளையொட்டி திருப்பதி கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியிருக்கிறார். 

சந்திரபாபு நாயுடு பேரன்


சமீபத்தில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானவர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்னையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியதாக அதிரடியாக அறிவித்தார் சந்திரபாபு நாயுடு. மேலும், மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தன் செல்ல பேரன் நர தேவன்ஷின் நான்காவது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடி வருகிறார்.

சந்திரபாபு நாயுடு பேரன்
 

சந்திரபாபு நாயுடு, அவரின் மகனும் அமைச்சருமான நர லோக்கேஷ், மருமகள் நர பிராமணி, பேரன் நர தேவன்ஷின் உள்ளிட்டோருடன் திருப்பதி கோயிலுக்கு விசிட் அடித்தார். சந்திரபாபுவின் சம்பந்தியும் எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணா அவர்களுடன் கோயிலுக்கு வந்திருந்தார்.

சந்திரபாபு நாயுடு பேரன்

நேற்று மாலையே திருமலா கோயிலுக்கு வந்த குடும்பத்தினர், அதிகாலை தரிசனத்தை பார்த்துவிட்டு கோயிலுக்கு வந்த மற்ற பக்தர்களுடன் அமர்ந்து அன்னப் பிரசாதம் சாப்பிட்டனர். இதனையடுத்து சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் திருமலா கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் காணிக்கை கொடுத்தனர்.

சந்திரபாபு நாயுடு பேரன்
 

சந்திரபாபு நாயுடு கோயிலுக்கு ரூ.26 லட்சம் காணிக்கையாகக் கொடுத்த செய்தியைவிட, அவரின் சுட்டிப் பேரன் தேவன்ஷ்தான் இன்று ஹாட் டாபிக். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தபோது அவரின் கடைகுட்டி  ஹேட்ரினின் சுட்டித்தனமான புகைப்படங்கள் வைரலாகின. அதேபோன்று தற்போது தேவன்ஷின் சுட்டித்தனமான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

சந்திரபாபு நாயுடு பேரன்

தேவன்ஷின் தாத்தாக்களான சந்திரபாபு நாயுடுவும் பாலக்கிருஷ்ணாவும் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில் இவர்களின் திடீர் குடும்ப விசிட் திருப்பதி பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close