பெட்ரோல் பங்க்கில் நீண்ட நேரம் காத்திருக்கிறீர்களா... கவலை வேண்டாம். வருகிறது டீசல் டோர் டெலிவரி! | Indian Oil Corporation starts home delivery service of diesel

வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (22/03/2018)

கடைசி தொடர்பு:08:14 (22/03/2018)

பெட்ரோல் பங்க்கில் நீண்ட நேரம் காத்திருக்கிறீர்களா... கவலை வேண்டாம். வருகிறது டீசல் டோர் டெலிவரி!

வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்குகளுக்குச் சென்று நீண்ட நேரம் காத்துக்கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. ஆம், வீடு தேடிவந்து டீசல் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. 

டீசல் டோர் டெலிவரி

photo credit: twitter/@indianoilcorp

பொதுத்துறை நிறுவனமும், இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமுமான இந்திய எண்ணெய்க் கழகம், நாடு முழுவதும் இந்தியன் ஆயில் பெயரில் பெட்ரோல், டீசல் பங்க்குகளை நடத்திவருகிறது. கூடவே, இண்டேன் கேஸ் எரிவாயு சேவை, பெட்ரோகெமிக்கல் சேவைகளையும் வழங்கிவருகிறது. இதற்கிடையே, வீடு தேடிவந்து டீசல் அளிக்கும் வகையில், 'டீசல் டோர் டெலிவரி' திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் துவக்கியுள்ளது. சோதனை முயற்சியாக புனேவில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், சிறிய டேங்கர் லாரியில்  வீட்டுக்கே கொண்டுசென்று வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புக் குழுமத்தின் (PESO) அனுமதி கிடைத்தவுடன், இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 

ஃப்ரீ - புக்கிங் அடிப்படையில் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீடு மற்றும் அலுவலகம் தேடிவந்து டீசல் சப்ளை செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தேவையாக பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளைத் தவிர்த்துப் பார்த்தால், நகரங்களின் முக்கிய இடங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இதற்கு முடிவு கட்டும்விதமாக, டோர் டெலிவரி திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகர வாகன ஓட்டிகளின் பிரச்னைகள் தீரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close