வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (22/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (22/03/2018)

`ஆர்.எஸ்.எஸ் என்ன தீவிரவாத இயக்கமா?' - கொந்தளித்த பாபா ராம்தேவ்

`ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைப் பக்கத்தில் இருந்து பார்த்தவன் நான். அந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறுவதா?’ எனப் பொங்கியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ்.

பாபா ராம்தேவ்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகள் ஆயுதங்களைக் கையாளும் முறை குறித்த பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்து வருகின்றன. இத்தகைய பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பது சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற சில அமைப்புகள் கம்புகளைக் கொண்டு பயிற்சிகளை கற்பித்து வருகின்றனர், அதுமட்டுமின்றி தேவஸ்தான கோயில்களிலும்கூட இத்தகையச் செயல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் அந்த அமைப்புகளைத் தடைசெய்வோம்' எனக் கேரளா சட்டசபையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

இதற்கு, 'ஆர்.எஸ்.எஸ், தலைவர்களைப் பக்கத்தில் இருந்து பார்த்தவன் நான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்போ அல்லது நக்சல் அமைப்போ அல்ல. அவர்கள் நமது நாட்டுக்கு எதிராக எந்த ஓர் அசம்பாவித செயல்களிலும் ஈடுபடவில்லை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது ஒரு தேசியவாத அமைப்பு' எனப் யோகா குரு பாபா ராம்தேவ் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.