7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!- தொடங்கும் அன்னா ஹசாரே 

வலுவான ஜன் லோக்பால் சட்டத்தை இயற்றக்கோரியும், வேளாண்மை  உற்பத்திக்கான செலவை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, அன்னா ஹசாரே டெல்லியில் இன்று தொடங்க உள்ளார். 

அன்னா ஹசாரே போராட்டம்

ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். அதனால், ஜன் லோக்பால் எனும் மசோதாவை விரைவில் அமல்படுத்த வேண்டும்  ஆகியவற்றை வலியுறுத்தி, கடந்த 2011-ம் ஆண்டு, டெல்லி ராம்லீலா மைதானத்தில் 11 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு, மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. அதன்பின், மத்திய அரசு லோக்பால் மசோதாவை விரைவில் அமல்படுத்துவோம் என உறுதியளித்ததை அடுத்து, தனது போராட்டத்தைக் கைவிட்டார். 

உண்ணாவிரதப் போராட்டம்

2011-ம் ஆண்டுக்குப் பிறகு, அதே ராம்லீலா மைதானத்தில், லோக்பால் மசோதா மற்றும் வேளாண்மை உற்பத்திக்கான செலவை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அன்னா ஹசாரே மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்க உள்ளார். 

இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் சாராத விவசாய அமைப்புகள், தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன. மேலும், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், முன்னாள் கர்நாடகா லோகாயுக்தா அமைப்பில் அங்கம் வகித்த சந்தோஷ் ஹெக்டேவும் கலந்துகொள்கிறார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!