மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்! மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்

மாநிலங்களவையில் காலியாக உள்ள 25 எம்.பி பதவிகளுக்கு, இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது.

எம்.பி தேர்தல்

உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர்,மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள எம்.பி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்த மாநிலங்களின் மொத்த 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக இருந்தது. அதில் 33 பேர் முன்னரே போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர். அதில், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உட்பட 19 பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள்.  மீதமுள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களும், மேற்கு வங்கத்தில் 5 இடங்களும், சத்தீஸ்கரின் ஒரு இடமும், கர்நாடகாவில் 4 இடங்களும், தெலுங்கானாவில் 3 இடங்களும், ஜார்கண்ட்டில் 2 இடங்களும் காலியாக உள்ளன. உத்தரப்பிரதேசத்தில், அருண்ஜெட்லி உட்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். அதிலும், அந்த மாநிலத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த 8 பேர் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இன்று காலை துவங்கிய இதற்கான வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்துக்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தங்களுக்கான இடங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!