Published:Updated:

குஜராத் பாலம் விபத்து: பாஜக எம்.பி குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு!

மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா

குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் பாஜக-வைச் சேர்ந்த எம்.பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் பாலம் விபத்து: பாஜக எம்.பி குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் பாஜக-வைச் சேர்ந்த எம்.பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் சாத் பூஜை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் கேபிள் பாலத்தில் நேற்று மாலை சாத் பூஜைக்காக ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்று, அவர்கள் பூஜை செய்த பொருள்களை ஆற்றில் போட்டுக்கொண்டிருந்தனர். அதில் அதிகமானோர் பெண்கள். இந்த நிலையில், திடீரென அந்த கேபிள் பாலத்தின் மத்தியப் பகுதி அறுந்து விழுந்தது.

மோர்பி பாலம்
மோர்பி பாலம்
ட்விட்டர்

இதனால் பாலத்தில் நின்றிருந்தவர்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் மக்களும், போலீஸாரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக இந்த மீட்புப்பணி நடந்தது. இதில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்புப்படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த விபத்தில் ராஜ்கோட்டின் பா.ஜ.க எம்.பி-யான மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் 12 குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``இந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட என் குடும்பம் மற்றும் என் சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என 12 பேரை இழந்துவிட்டேன். விபத்தில் உயிர் பிழைத்த அனைவரும் மீட்கப்பட்டிருக்கின்றனர். NDRF, ராணுவம், SDRF மற்றும் உள்ளூர் நிர்வாகம் உட்பட ஐந்து குழுக்கள் போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா
மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா
ட்விட்டர்

இந்த விபரீதம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர். இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள், உள்ளூர்வாசிகள் அதிகம்" எனத் தெரிவித்திருக்கிறார்.