Published:Updated:

குஜராத்: `பாகிஸ்தானிலிருந்து கடல்வழி கடத்தல்; ரூ.600 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

சமீபகாலமாக, குஜராத்தில் போதைப்பொருள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது. முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் குஜராத்தில் 120 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலம், மொர்பி மாவட்டம், சிஞ்சுடா கிராமத்தில் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் படை போலீஸார் 120 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்திருக்கின்றனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.600 கோடி என்று கூறப்படுகிறது. இது குறித்து குஜராத் பயங்கரவாதத் தடுப்பு படை டி.ஐ.ஜி ஹிமன்சு சுக்லா அளித்த பேட்டியில், ``ஆரம்பகட்ட விசாரணையில் முக்தார் உசேன், குலாம் பகத் ஆகியோர் பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் குஜராத் கடல் பகுதிக்கு ஹெராயினைக் கடத்திக்கொண்டு வந்திருக்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்

அதை, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஹித் என்பவர் அனுப்பயிருக்கிறார். 2019-ம் ஆண்டு, குஜராத்தில் 227 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த வழக்கில் ஜாஹித்தை ஏற்கெனவே தேடிவருகிறோம். இந்தியாவுக்குக் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஹெராயின், இந்திய கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்படும். அவற்றை அவர்கள் ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்திருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான், ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.1,320 கோடி மதிப்பிலான போதைப்பொருளை குஜராத்தில் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம், ஆப்கானிஸ்தானிலிருந்து கன்டெய்னரில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.21,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சென்னை தம்பதி கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் தேசியப் புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்திவருகிறது. குஜராத் கடல்வழியாகச் சர்வ சாதாரணமாக, போதைப்பொருள் கடத்திவரப்படுவது இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

3,000 கிலோ; ரூ.21,000 கோடி மதிப்பு! - குஜராத்தில் சிக்கிய ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு