புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை ஒருநாள் இன்ஸ்பெக்டராக்கி அழகுபார்த்த மும்பை போலீஸ்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றி மும்பை போலீஸார் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளனர். 

Photo Credit: Twitter/MumbaiPolice

மும்பையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் அர்பித் மண்டல், கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அர்பித்தின் ஆசையை மும்பை போலீஸார் நிறைவேற்றியுள்ளனர். அர்பித்தின் லட்சியம் குறித்து கேள்விப்பட்ட மும்பை போலீஸார், அவருக்கென பிரத்யேகமாகத் போலீஸ் சீருடையை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். அத்துடன், மும்பை முலுந்த் காவல் நிலையத்திற்கு ஒருநாள் பொறுப்பாளராகவும் அவரைப் பணியாற்றச் செய்து அழகு பார்த்திருக்கிறார்கள் மும்பை போலீஸார். 

போலீஸ் சீருடையில் இன்ஸ்பெக்டராக அர்பித் இருப்பது போன்ற புகைப்படங்களை மும்பை போலீஸார், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மும்பை போலீஸாரின் மனிதநேயமிக்க இந்தச் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மும்பை போலீஸார், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருவதுண்டு. அது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!