வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (24/03/2018)

கடைசி தொடர்பு:13:30 (24/03/2018)

நான்காவது மாட்டு தீவன ஊழல் வழக்கு! - லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஏற்கெனவே மூன்று வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு, லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார். இன்று, தும்கா கருவூலத்திலிருந்து 3.13 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக எடுத்தது தொடர்பான 4-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று கடந்த 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த வழக்கில் இன்று லாலு பிரசாத் யாதவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, முதல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 15 ஆண்டுகளும் லாலுவுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.