வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (24/03/2018)

கடைசி தொடர்பு:17:22 (24/03/2018)

3 நாள்கள் சல்லடைப் போட்டுத் தேடிய சிபிஐ! - நிரவ் மோடி வீட்டில் சிக்கிய ரூ.10 கோடி மோதிரம்

நிரவ் மோடி

மூன்று நாள் தொடர் சோதனைக்குப் பிறகு நிரவ் மோடி வீட்டிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு மோதிரம், ரூ.1.40 கோடி மதிப்பிலான கை கடிகாரம் மற்றும் சில விலை உயர்ந்த ஓவியங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். 

இந்தியாவின், பிரபல நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யிடம், பி.என்.பி., வங்கி புகார் அளித்தது. இதனையடுத்து, நேற்று பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளைக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சீல் வைத்து விசாரணை நடத்தினர். 

அதனையடுத்து, நிரவ் மோடிக்குச் சொந்தமான பண்ணை வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஐ.பி.ஐ அதிகாரிகளுடன் அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையை அடுத்து, நிரவ் மோடியின் ரூ.523 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்

கை கடிகாரம்

மோசடி குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மும்பை வார்லி, சமுத்ரா மஹால் பகுதியில் உள்ள நிரவ் மோடியின் குடியிருப்பு வளாகத்தில், சி.பி.ஐ அதிகாரிகள் 3 நாள் தொடர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் நிரவ் மோடிக்குச் சொந்தமான, ரூ .10 கோடி மதிப்பிலான ஒரு மோதிரம், ரூ.1.40 கோடி மதிப்பிலான கை கடிகாரம் உட்பட சில விலை உயர்ந்த ஓவியங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.