சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொடூரம்! 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒருவரை வலைவீசித்தேடி வருகின்றனர். இந்தக் கொடூரம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ளது. 

பாலியன் வன்கொடுமை

அஸ்ஸாம் மாநிலம், நகோவன் மாவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 2 சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞன் சேர்ந்து கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், அந்தச் சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர். 90 சதவிகித தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், சிறுமியிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளோம். முதற்கட்ட விசாரணையில், இந்தக் குற்றச்செயலில் 10 மற்றும் 11 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்களும், 21 வயது இளைஞர் ஒருவரும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த இரண்டு சிறுவர்களைக் கைது செய்துள்ளோம். மற்றொருவர் தலைமறைவாக உள்ளான். அவரைத் தேடும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!