பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டவர்களைச் செருப்பால் அடித்த பொதுமக்கள்!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், இளம் பெண் ஒருவரைக் கூட்டு வன்கொடுமை செய்த குற்றவாளிகளைப் பொதுமக்கள் செருப்பால் அடித்தனர். 

பாலியல் வன்கொடுமை

மத்தியப்பிரதேச மாநிலத்தில், கடந்த சனிக்கிழமை அன்று  முன்னாள் காதலன் மற்றும் அவரின் நண்பன் இணைந்து ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், இருவர் இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். 

எனினும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நால்வரையும் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் சுமார் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். கைது செய்யப்பட்ட நால்வரும் காவல்துறையினரால், சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

பாலியல் வன்கொடுமை

அப்போது சாலையில் இருந்த பொதுமக்கள், அவர்களைச் செருப்பால் அடித்தனர். பல பெண்களும் அப்போது அவர்களைத் தாக்கினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. மத்திய குற்றப்பிரிவு ஆவணங்களின்படி மத்திய பிரதேச மாநிலம் அதிகப்படியான, பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!