நீதிமன்றத் தடையை மீறி சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணம்! - டெல்லியில் கோலாகலம்

குடும்ப நல நீதிமன்றத் தடையைமீறி டெல்லியில் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடைபெற்றது.

திருமணம்

அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் என்று தகவல்கள் பரவின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின.  இதற்கு எதிராக ராமசாமியின் மனைவி சத்யபிரியா, மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 'தனக்கும் ராமசாமிக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கும் எனக்கும் 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர், என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தற்போது, எனக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்ள உள்ளார். அதைத் தடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.  

 

இந்த மனு, நீதிமன்றத்தில் கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யபிரியாவுக்கும் ராமசாமிக்கும் இடையேயான திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம். ராமசாமி, வேறொரு திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நீதிமன்றத்தின் முன் சத்யபிரியாவை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு திருமணம் செய்துகொள்ளலாம்" என்று ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமிக்கும் டெல்லியில் இன்று திருமணம் முடிந்தது. ராமசாமி வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை மீறி, தற்போது இவர்களின் திருமணம் முடிந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!