வங்கிகளுக்குத் தொடர் விடுமுறையா? - அதிகாரி விளக்கம்

bank holidays

'வங்கிகளுக்குத் தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை என, ‘வாட்ஸ்-அப்’பில் பரவும் தகவல் உண்மையில்லை' என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தே.தாமஸ் ஃப்ராங்கோ ராஜேந்திர தேவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாள்களாக, வங்கி விடுமுறைகுறித்து வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வைரலாகப் பரவிவருகிறது. அதில், ’வரும் 29-ம் தேதி வியாழக்கிழமை, 'மகாவீர் ஜெயந்தி.' 30-ம் தேதி, 'புனிதவெள்ளி', 31-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்ரல்1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஏப்ரல் 2-ம் தேதி திங்கட்கிழமை, ஆண்டு கணக்கு முடிப்பு தினம் எனத் தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது. எனவே, மக்கள் தங்கள் வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளவும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகவல் பற்றி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தே.தாமஸ் ஃப்ராங்கோ ராஜேந்திர தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வரும் 29, 30-ம் தேதிகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனிதவௌ்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், 31-ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அன்றைய தினம், வழக்கம் போல வாடிக்கையாளர்கள் அனைத்து வங்கிச் சேவைகளையும் மேற்கொள்ளலாம். ஏப்ரல் 2-ம் தேதி, வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிக்கும் தினம். எனவே, அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால், அன்று வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!