" ஈராக்கில் பலியான இந்தியர்களின் உடல்கள் ஒரு வாரத்துக்குள் கொண்டுவரப்படும்!''  -சுஷ்மா ஸ்வராஜ் | "Dead bodies of 39 Indians killed in Iraq will be brought to India within a week!" - Sushma Swaraj

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (27/03/2018)

கடைசி தொடர்பு:08:33 (27/03/2018)

" ஈராக்கில் பலியான இந்தியர்களின் உடல்கள் ஒரு வாரத்துக்குள் கொண்டுவரப்படும்!''  -சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா ஸ்வராஜ்

"ஈராக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களும் ஒரு வாரத்துக்குள் இந்தியா கொண்டு வரப்படும்'' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம், ஈராக்கின் மிகப்பெரிய நகரமான மொசூலை, ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்போது, இந்தியாவின் பஞ்சாப், இமாசலப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக அங்கு சென்றிருந்த 40 பேரை, ஐ.எஸ். பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி, ரகசிய இடத்துக்குக் கொண்டுசென்றனர். அவர்களின் கதி என்னவானது என்பது உடனடியாகத் தெரியவில்லை. அப்போதே, இறந்துவிட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்தச் சூழலில், கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தத் தகவல், நம்பிக்கையுடன் காத்திருந்த குடும்பத்தினருக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. 

இந்த நிலையில், ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், "இறந்தவர்களின் உடலை ஒருவாரத்திற்குள் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார். மேலும், மத்திய அமைச்சர் வி.கே சிங், ஈராக் சென்று இதற்கான அனைத்துப் பணிகளையும் கண்காணிக்க உள்ளதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க