கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

கர்நாடகாவில் தற்போது நடைபெற்றுவரும் காங்கிரஸின் 5 ஆண்டு ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது.

கர்நாடகா தேர்தல் தேதி

கர்நாடகாவில், கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக ஆட்சி நடத்திவருகிறார். இந்நிலையில், வரும் மே மாதத்துடன் அம்மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால், அங்கு சட்டசபைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. இதில், 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தலைமைத் தேர்தல் அதிகாரி ஓம்பிரகாஷ் ராவத் பெங்களூரு சென்று, அங்குள்ள மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, இன்று டெல்லியில் நடைபெற உள்ள தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு, கர்நாடகாவின் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவித்த பின், மாநிலம் முழுவதும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும். இதனால், எந்த நலத்திட்டங்களையும் அரசு செய்ய முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!