`அமரும் இடத்தில் இரும்புக் கம்பிகள்!’- திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ்;  வருத்தம் தெரிவித்த ஹெச்.டி.எஃப்.சி

மும்பை ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கிளை முன்பு அமைக்கப்பட்டிருந்த இரும்பு கூர்முனைக்  கம்பிகளால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, அவை அகற்றப்பட்டுள்ளன. 

ஹெச்.டி.எஃப்.சி
 

மும்பை எம்.ஜி சாலையில், ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கிளை அமைந்துள்ளது. அங்கு, சமீபத்தில் கட்டட சீரமைப்புப் பணி நடைபெற்றது. அப்போது, அலுவலக வளாகத்தின் முன்பு இருந்த காலி இடத்தில், கூர்மையான கம்பிகளைப் பொருத்தி வைத்தனர்.  

ஹெச்.டி.எஃப்.சி

ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர்,  இரும்புக் கம்பிகளை புகைப்படம் எடுத்து, வங்கி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.

 

ஹெச்.டி,எஃப்.சி

‘சாலையோரத்தில் வசிக்கும் முதியவர்கள், சில சமயம் வங்கி முன்பு அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அதைத் தடுக்கவே இந்தக் கூர்மையான கம்பிகளைப் பொருத்தியது வங்கி நிர்வாகம். இது, மனிதத் தன்மையற்ற செயல்’,  ‘ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்தக் கூர்மையான கம்பிகளைப் பொருத்தி வைத்ததற்கான நோக்கம் என்ன?’, ‘முதியவர்கள் அல்லது விலங்குகள் இரவில் தெரியாமல் இந்தக் கம்பிமீது விழுந்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்து’ இவ்வாறு வங்கி நிர்வாகத்துக்கு எதிராக ட்விட்டரில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி #ShameOnHDFC என்னும் ஹேஷ் டாக்கின் கீழ் நெட்டிசன்ஸ் திட்டித்தீர்த்தனர்.


இதையடுத்து, ஹெச்.டி.எஃப்.சி நிர்வாகம் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளது. அதோடு, அந்த இரும்புக் கம்பிகளை அகற்றிவிட்டது.  ’வங்கி முன்பு பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகளால் மக்களுக்கு ஏற்பட்ட அசெளகர்யத்துக்கு வருந்துகிறோம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வங்கி நிர்வாகம்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!