`நீங்கள் ஓர் அற்புதமான நடிகர்!’ - மோடிக்கு வாழ்த்து சொன்ன ஜிக்னேஷ்

ஜிக்னேஷ் , மோடி

சர்வதேச உலக திரையரங்கு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி வாழ்த்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவரும் ஜிக்னேஷ் மேவானி இன்று ட்விட்டரில் பிரதமர் மோடியைப் பகடி செய்து பதிவிட்டுள்ளார். ஜிக்னேஷின் பதிவில் ‘நரேந்திர மோடிக்கு உலகத் திரையரங்கு நாள் வாழ்த்துகள். இன்றுவரை, இந்தியாவில் மோடியைப் போன்ற தலைசிறந்த நடிகரைப் பார்த்ததில்லை. அவரின் நடிப்புத் திறமை அற்புதமானது. குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு இந்நாளில் வாழ்த்து தெரிவியுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

ஜிக்கேஷ் ட்வீட்

ஜிக்னேஷின் பதிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பலர் பதிவிட்டு வருகின்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!