ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு! காக்னிஸன்ட் வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாட்டின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான காக்னிஸன்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். சுமார் ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காக்னிஸென்ட்

இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் முதன்மைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காக்னிஸன்ட் நிறுவனம், டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தனது கிளைகளைக்கொண்டு செயல்பட்டுவருகிறது.  ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலைசெய்துவரும், இந்நிறுவனத்துக்குச் சொந்தமான கிளைகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வுசெய்தபோது, காக்னிஸன்ட் நிறுவனம், சுமார் ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், காக்னிஸன்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் வைப்பு நிதிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கிவைத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!