கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிற்கும் நோட்டீஸ்...! மத்திய அரசு அதிரடி

இந்தியப் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பேஸ்புக்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உதவி செய்தது என சமீபத்தில் பிரிட்டனின் சேனல் 4 செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான தேர்தல் வியூகம் வகுப்பதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சி.இ.ஓ நிக்ஸ் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் என்று கூறினார். இந்தக் குற்றச்சாட்டுக்குக் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. எனினும், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என 6 கேள்விகளுடன் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு இந்தியர்களின் தகவல்கள் விற்கப்பட்டது என எழுந்துள்ள புகாருக்கு விளக்கமளிக்க கோரி ஃபேஸ்புக்கிற்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க கூறியுள்ள இந்த நோட்டீஸில், இந்தியர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? அதை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட ஐந்து கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!