வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (29/03/2018)

கடைசி தொடர்பு:09:28 (29/03/2018)

இன்று விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி எஃப்-8 ’

 ‘ ஜி சாட்-6 ஏ ’ என்ற செயற்கைக்கோளைத் தாங்கிக்கொண்டு, ஜி.எஸ்.எல்.வி  எஃப் -8 ராக்கெட் இன்று விண்ணில் செல்ல உள்ளது.

ஜி.எஸ்,எல்.வி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  ‘இஸ்ரோ’ தகவல் தொலைத்தொடர்பு வசதிக்கான அதிநவீன வசதிகளுடன்கூடிய  ‘ஜி சாட்-6 ஏ’ என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்த உள்ளது. இது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்திஸ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளது. இதன் 27 மணிநேர கவுன்டவுண், நேற்று பிற்பகல் தொடங்கியது.

 இன்று மாலை 5 மணியளவில் இது விண்ணில் ஏவப்பட உள்ளது, ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட அடுத்த 17 நிமிடங்களில், பூமிக்கு அருகில் 170 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் 2,140 கிலோ எடைகொண்டது, இதன் ஆயுட்காலம் 10
ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தபட்டவுடன், தனது தகவல் தொலைத்தொடர்பு கண்காணிப்                  புப்பணிகளைத் தொடங்கிவிடும். இது, இஸ்ரோ அனுப்பும் 12-வது ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் ஆகும். இதில்,செயற்கைக்கோள் 7 முறை  வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, 4 முறை இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. முன்னதாக செலுத்தப்பட்ட  ‘ஜி சாட்-6’ என்ற செயற்கைக்கோளின் மேம்பட்டதாக இந்த ‘ஜி சாட்-6 ஏ’ இருக்கும்.