`கியாரே...செட்டிங்கா?’ - இணையத்தைக் கலக்கும் காலா டீசரின் தோனி வெர்ஷன்!

ரஜினியின் காலா வசனத்தை சி.எஸ்.கே. கேப்டன் தோனி பேசுவது போல உருவாக்கப்பட்டுள்ள காலா டீசரின் தோனி வெர்ஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

தோனி

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் 2-வது முறையாக இணைத்திருக்கும் படம் காலா. இந்தப் படத்தின் டீசர் கடந்த 1-ம் தேதி வெளியானது. வெளியானது முதல் வைரலாகப் பரவியது. அதற்கு காரணம் டீசரில் ரஜினி பேசியிருக்கும் வசனங்கள்தாம். `கியாரே செட்டிங்கா.... வேங்கை மவன் ஒத்தையில நிக்கிறேன்’ என டீசர் முழுவதும் அவர் பேசியிருக்கும் வசனங்கள் ஹிட் அடித்தன. அதைத்தொடர்ந்து ரஜினியின் வசனத்தைப் பின்பற்றி பலரும் ட்ரோல் விடீயோக்களை வெளியிட்டனர். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, காலா படத்தின் தோனி வெர்ஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐபிஎல்-லில் களம்காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புரொமோஷன் செய்யும் வேலைகளில் அணி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் சி.எஸ்.கே. வீரர்கள் ஹர்பஜன் சிங், முரளி விஜய், டேரன் பிராவோ மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் காலா பட வசனங்களைப் பேசியிருக்கும் டீசர் வெர்ஷனை காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!