வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (30/03/2018)

கடைசி தொடர்பு:08:59 (30/03/2018)

டெல்லி விமான நிலையத்தில் திடீர் சோதனை... பாதிக்கப்பட்ட பயணிகள்

டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற திடீர் சோதனையால், பயணிகள் வெகுநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

டெல்லி

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில், நேற்று அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு நிலவியது. பயணிகள், தாங்கள் கொண்டுவரும் அபாயகரமான பொருளான பவர்பேங் போன்றவற்றை விமானத்தில் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இதனால், விமானத்தில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை, சில பயணிகள் தங்களில் கைப் பைகளில் வைத்து விமானத்தினுள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.  அதைத் தடுக்கவே, டெல்லி விமான நிலையத்தில் நேற்று சோதனை நடைபெற்றது.

இந்த வாரம் அதிக விடுமுறை நாள்கள் இருப்பதால், விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால், பயணிகளின் பைகளைச் சோதனைசெய்ய தாமதமானதால், அவர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைமை
ஏற்பட்டது. திடீர் சோதனையால் அங்கு குழப்பமான சூழல் நிலவியது.