`குதிரைச் சவாரிக்கு ஆசைப்பட்ட பட்டியலின இளைஞர் படுகொலை! - குஜராத்தில் பயங்கரம்

குதிரைச் சவாரி செய்ததற்காக குஜராத்தில் பட்டியலின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குதிரை சவாரி
 

இந்தச் சம்பவம் குறித்து பாவ்நகர் எஸ்சி / எஸ்டி பிரிவு காவல் துணைகண்காணிப்பாளர் எம்.எம்.சையத் ஊடகங்களிடம் கூறுகையில்...

``குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், திம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதிப் ரத்தோட்(21). இவர் சமீபத்தில் குதிரை ஒன்றை வாங்கியிருக்கிறார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரதிப் குதிரை வாங்கியது, அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தினருக்குப் பிடிக்கவில்லை. இதனால், குதிரை விற்றுவிடும்படி கிராம மக்கள் பலமுறை மிரட்டியுள்ளனர். ஆனால், பிரதிப் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிலர் பிரதிப்பை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொலை செய்துள்ளனர். இதுபற்றி பிரதிப்பின் தந்தை காவல்துறையில் புகாரளித்துள்ளார். அவர் புகாரின் பேரில் அந்தப் பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி  காட்சிகளை ஆய்வு செய்தோம். கொலை நடப்பதற்கு முன்பு பிரதிப் குதிரையில் செல்வது பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.


இந்தச் சம்பவத்தில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. பிரதிப் கொலை நடந்துள்ள திம்பி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குதிரையை வளர்க்கவோ சவாரி செய்யவோ கூடாதாம்!  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!