`சித்ரவதைகளைக் கண்டுகொள்ளாத பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்!' - மாயாவதி தாக்கு | bjp and rss does not care about the people of backward castes and tribals says mayawati

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (31/03/2018)

கடைசி தொடர்பு:19:00 (31/03/2018)

`சித்ரவதைகளைக் கண்டுகொள்ளாத பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்!' - மாயாவதி தாக்கு

''பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனுபவிக்கும் சித்ரவதைகளை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கண்டுகொள்ளவில்லை'' என பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 

மாயாவதி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு, சமீபத்தில் மாநில ஆளுநர் ராம் நாயக்கின் பரிந்துரையில், அம்பேத்கரின் பெயரில்  `ராம்ஜி' என்ற புதிய பெயரைச் சேர்த்து, டாக்டர்.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாநில அரசு அறிவித்தது. இதற்குக் காரணம், 'மகாராஷ்டிராவின் பொதுவான நடைமுறைப்படி, தந்தையின் பெயர் நடுவில் சேர்க்கப்படுவது வழக்கம். அதனால்தான், அம்பேத்கர் பெயரின் நடுவில், அவரது தந்தை பெயரான ராம்ஜியைச் சேர்த்துள்ளோம்' என்று விளக்கமளித்துள்ளனர். மேலும், அரசியலமைப்பு ஆவணங்களில்,’பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்றே அம்பேத்கர் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, `பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனுபவிக்கும் சித்ரவதைகளை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கண்டுகொள்ளவில்லை. அவர்கள், மக்களுக்காகப் பணியாற்றுவதை விடுத்து, வாக்கு வங்கியை மனதில் வைத்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பிரச்னையைத் தீர்க்காமல், பெயரை மாற்றுவதில் என்ன பயன் இருக்கிறது. அம்பேத்கர் பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்பட்டார். ஆனால், பா.ஜ.க. அரசு அவரின் பெயரை மாற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது’’ என்றார்.