சி.பி.எஸ்.இ கேள்வித்தாளை லீக் செய்தவர்கள் கைது...!  டெல்லி போலீஸ் அதிரடி

சி.பி.எஸ்.இ கேள்வித்தாளை லீக் செய்தவர்கள் கைது...!  டெல்லி போலீஸ் அதிரடி

சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சி.பி.எஸ்.இ

மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கிய சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த திங்கள்கிழமை நடந்த 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கான கேள்வித்தாள்  வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கேள்வித்தாள் வெளியானது.  எனினும், இந்தப் புகாரை சி.பி.எஸ்.இ முதலில் மறுத்தது. அதன்பின் நடந்த 10-ம் வகுப்பு கணக்குத் தேர்வுக்கான வினாத்தாளும் லீக்கானதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கேள்வித்தாள் வெளியானதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக வசைபாடி வந்தநிலையில், சி.பி.எஸ்.இ-க்கு எதிராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உடனே இரு பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்த சி.பி.எஸ்.இ இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடைபெறும் என அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 25-ம் தேதி 12-ம் வகுப்பு பொருளியலுக்கான மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும், பிரதமர் மோடியும் இதில் தலையிட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கேள்வித்தாளை லீக் செய்த டெல்லியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருவரும், தனியார் கோச்சிங் சென்டர் ஓனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து கூறியுள்ள டெல்லி போலீஸார், "கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்கள்தான் சிபிஎஸ்இ வினாத்தாளை லீக் செய்துள்ளனர். காலை 9.15 மணிக்கு சிபிஎஸ்இ கேள்வித்தாளை 2 ஆசிரியர்களும் போட்டோ எடுத்துள்ளனர். பின்னர் அதனை தனியார் கோச்சிங் சென்டர் உரிமையாளருக்கு 2 பேரும் அனுப்பியுள்ளனர். இதற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!