`காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது ஆர்.எஸ்.எஸ் மொழி அல்ல..!'' மோகன் பகவத் சூசகம்

`காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது ஆர்.எஸ்.எஸ் மொழி அல்ல..!'' மோகன் பகவத் சூசகம்

``காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளில் கிடையாது'' என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

மோகன் பகவத்

கடந்த 2014-ம் ஆண்டு, பா.ஜ.க வெற்றிபெற்று மோடி பிரதமரானது முதல், அக்கட்சியின் ஒரே கோஷமாக இருப்பது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதே. பா.ஜ.க-வினரின் ஒவ்வொரு மேடையிலும் இந்த வாசகத்தைக் கேட்க முடியும். ஏன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூட, மகாத்மா காந்தியின் கனவான 'காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பதைத்தான் நாடிவருவதாகத் தெரிவித்தார். இதற்கு, காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. 

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், புனேயில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நேற்று கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், ``நாட்டை கட்டமைப்பது தனி மனிதனால் முடியாத காரியம். அதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் பங்களிப்பு மிக அவசியம். காங்கிரஸ் அல்லாத இந்தியா என்ற கோஷம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கிடையாது. அது, அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் கோஷமே. யாரையும் ஒதுக்கக்கூடிய வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. நம் சித்தாந்தங்களும், கொள்கைகளும் முரண்பாடானவை என்றாலும், அனைவரையும் ஒன்றிணைத்தே நாட்டை கட்டமைக்க முடியும். அதேபோல, ஆர்.எஸ்.எஸ் இல்லாத இந்தியா என்ற கோஷங்களும் முறையற்றது. இதுபோன்ற கோஷங்களால், நாம் பிரிவினைக்கு ஆளாக நேரிடும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!