அட்டப்பாடி மது குடும்பத்துக்கு சேவாக் ஒன்றரை லட்சம் நிதியுதவி!

மது குடும்பத்துக்கு சேவாக் உதவி

கேரளாவில் அடித்து கொலை செய்யப்பட்ட மதுவின் குடும்பத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஒன்றரை லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சேவாக் நிதியுதவி

பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மது என்ற மனநலம் பாதித்த இளைஞர் அரிசி திருடியதாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 16 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு சேவாக் கடும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முஸ்லிம், இளைஞர்கள் பெயர்கள் மட்டுமே சேவாக் ட்வீட்டில் இடம் பெற்றதால் சர்ச்சையானது. இதையடுத்து ட்வீட்டை நீக்கிய வீரேந்திர சேவாக் தவறுக்கு மன்னிப்பு கோரினார். தனக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே அந்த ட்வீட்டைப் பதிவிட்டதாகச் சேவாக் கூறினார். மனிதாபிமானமற்ற இந்தச் செயலுக்கு ட்வீட் வெளியிட்டு கண்டனம் தெரிவித்ததோடு, சேவாக் நிறுத்திக்கொள்ளவில்லை. 

மது குடும்பத்துக்கு வழங்கப்பட்ட காசோலை

மதுவின் குடும்பத்துக்கு சேவாக் ஒன்றரை லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தாயார் மல்லியின் பெயருக்கு வீரேந்திர சேவாக் பவுண்டேஷன் சார்பாக அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே, கேரள அரசு, ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!