`ஐ லவ் மை பூஜா..!' - தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியரை அதிரவைத்த மாணவன்

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் சிலரின் விநோத வினாத்தாள்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

answer sheet

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த மாதம் இடைநிலைத் தேர்வுகள் (பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புக்கு) நடத்தப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் தொடங்கியது. முசாபர்நகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வில் விடை எழுதாமல் தன் சொந்தக் கதைகளை எழுதி வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள், விடைத்தாள்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றன. வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிலர், மாணவர்களின் விடைத்தாள்களைப் புகைப்படம் எடுத்து  சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மாணவர் விடைத்தாளில் தன் காதல் கதையை எழுதி வைத்து ‘ஐ லவ் மை பூஜா. காதலிப்பது ஒரு விசித்திரமான உணர்வு. வாழவும் விடாது சாகவும் விடாது. இந்தக் காதல் என்னைத் தேர்வுக்குப் படிக்கவும் விடவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று எழுதிவைத்துள்ளார். மற்றொரு மாணவர் எனக்கு அம்மா இல்லை; நான் தேர்வில் பாஸ் ஆகவில்லை என்றால் என் அப்பா என்னைக் கொன்றுவிடுவார். எனக்கு எப்படியாவது பாஸ் மார்க் போடுங்கள்’ என்று எழுதி வைத்துள்ளார்.

answer sheet
 

மேலும், ஒரு சில மாணவர்கள் ரூபாய் நோட்டுகளை விடைத்தாளோடு இணைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மீரத் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், `சில மாணவர்கள் அனுதாபம் தேடுவதற்காக இப்படிச் செய்வார்கள். இது புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் ஒரு சில மாணவர்கள் விடைத்தாளில் ஆசிரியருக்கு சோகக் கடிதம் எழுதுவது சகஜமான ஒன்று’ என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!