விஜய் மல்லையாவுடன் போஸ் கொடுத்த பிங்கி லால்வானி பற்றி தெரியுமா?!

விஜய் மல்லையாவுடன் போஸ் கொடுத்த பிங்கி லால்வானி பற்றி தெரியுமா?!

எஸ்.பி.ஐ மற்றும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடனாகப் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயைத் தொழில் அதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. இதுகுறித்து, விஜய் மல்லையா  மற்றும் அவரது நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார். லண்டனில் தங்கியுள்ள அவர், அதன் பின்னர் இந்தியா திரும்பவில்லை. எனவே, அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு கோரிக்கைவைத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை இங்கிலாந்து நாடு கைதுசெய்தது. உடனே, விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. இதுகுறித்த வழக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 

விஜய் மல்லையா

இந்நிலையில், விஜய் மல்லையா தற்போது பிங்கி லால்வானி என்பவரைத் திருமணம் செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. விஜய் மல்லையா தன்னுடைய நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிந்த சமீரா என்பவரை 1986-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். விஜய் மல்லையாவுக்கும், சமீராவுக்கும் சித்தார்த் மல்லையா என்கிற மகன் உள்ளார். ஓராண்டுக்குப் பின்னர் சமீராவைப் பிரிந்த மல்லையா, 1993-ம் ஆண்டு தன்னுடைய பால்யகால சிநேகிதியான ரேகாவை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லீனா, தான்யா என இரு மகள்கள் உள்ளனர். ரேகாவுக்கும், மல்லையாவுக்கும் முறையாக விவகாரத்து ஆகவில்லை.

தற்போது 62 வயதான மல்லையா, 38 வயதான பிங்கி லால்வானியைத் திருமணம் செய்யப் போகிறார் என்று பேசப்படுகிறது. யார் இந்தப் பிங்கி..?

விஜய் மல்லையா

மல்லையாவுக்குச் சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் 2011-ம் ஆண்டு ஏர் ஹோஸ்ட்ரஸாக பணியில் சேரும்போதுதான் மல்லையாவை சந்தித்துள்ளார் பிங்கி.  நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை பார்த்துவந்த பிங்கி, தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு வந்த மல்லையாவின் அம்மாவுடனான அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன்பிறகு, மல்லையாவின் அம்மாவுடன் நெருக்கமாகப் பழகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மல்லையாவுக்கும், அவருடைய அம்மாவுக்கும் நெருக்கமான நபராகவே பிங்கி இருந்துள்ளார்.

பிங்கிக்கும், மல்லையாவுக்கும் கடந்த ஏழு வருடங்களாக நட்பு இருந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக மல்லையாவும், பிங்கியும் லண்டனில் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வருகிறார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். 

எல்லாச் சூழ்நிலைகளிலும் மல்லையாவுக்கு பக்கபலமாக அவர் அருகிலேயே இருந்துள்ளாராம் பிங்கி. அவருடைய வழக்கு விசாரணைக்காக வந்தபோது அவருடனே கோர்ட்டில் இருந்துள்ளார். 

ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக மல்லையா இருந்தபோது, ராயல் சேலஞ்சர்ஸுக்கு ஆதரவளிப்பதற்காக மல்லையாவுடன், பிங்கியும் மேட்சில் கலந்துகொண்டுள்ளார். 

விஜய் மல்லையா

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மல்லையா தலைமறைவாகி இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றபோது, பிங்கியும் அவருடன் சென்றதாக சில தகவல்களும் வந்துள்ளன.  

சிறிது நாள்களுக்கு முன்னர், மூன்றாண்டு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை உற்சாகமாகக் கொண்டாடி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் இந்த ஜோடி. அந்தப் புகைப்படங்களை வைத்துத்தான் இவர்களுக்கு விரைவில் திருமணமாகப் போகின்றது என்கிற செய்தி வைரலாக பரவியிருக்கிறது. மல்லையா மற்றும் பிங்கியிடமிருந்து இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!