வெளியிடப்பட்ட நேரம்: 06:42 (03/04/2018)

கடைசி தொடர்பு:07:27 (03/04/2018)

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,581.88 (-58.99) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 23,644.19 (-458.92) என்ற அளவிலும்  திங்களன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது.  தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,340.90 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 67.64 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.

டாலரின் மதிப்பு ரூபாயில்

அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 65.0441 என்ற அளவில் இருந்தது.

 

நிஃப்டி எப்படி?

திங்களன்று நடந்த வியாபாரத்தின் இறுதியில் நிப்டி 10,221.80 (+98.10) முடிவடைந்தது.  டெக்னிக்கலாக நிஃப்டி 10153/10094/10059 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 10245/10279/10314 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டிருக்கின்றது. திங்களன்று இறுதியில் நிப்டி நல்லதொரு ஏற்றதுடன் முடிவடைந்திருக்கின்றது. டெக்னிக்கலாக ஏற்றம் தொடர நிப்டி இன்னமும் இரண்டுநாள்கள்  வரை வால்யூமுடன் பாசிட்டிவ் குளோசிங் நடக்கவேண்டியிருக்கும். நேற்றைக்கு அமெரிக்க சந்தை இறக்கத்தில் குளோசாகியுள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்வது குறித்து முடிவெடுக்கலாம். மிகவும் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் கூடிய மற்றும் உடனுக்குடன் லாபத்தினை புக்செய்துகொள்ளும் வண்ணம் செய்துகொள்ளும் வியாபாரத்துக்காக மட்டுமே அனைத்துவிதமான டிரேடர்களும் சந்தையை இன்று ட்ராக் செய்யலாம். புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் இன்றைக்கு வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது. கடைசி அரைமணி நேரத்துக்கு முன் இன்றைக்கு வியாபாரத்தை முடித்துக்கொள்ளுங்கள். செய்திகள் மற்றும் நிகழ்வுகள்மீது கண்வைத்துக்கொண்டே வியாபாரம் செய்யவேண்டிய நாளிது. டெக்னிக்கல்கள் மற்றும் அதனால் உருவாகும் லெவல்கள் அவ்வப்போது ஏமாற்றும் வண்ணம் அமைந்துவிட வாய்ப்பிருப்பதால், டெக்னிக்கல் டிரேடர்கள் அதிக அளவில் உஷாராக இருக்கவேண்டியிருக்கும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

02-04-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 4,031.89 கோடி ரூபாய்க்கு வாங்கியும்,  4,721.64 கோடி ரூபாய்  அளவுக்கு விற்றும் நிகர அளவாக 689.75 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்?

02-04-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால்  2,960.72 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 2,547.56 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 413.16 கோடி ரூபாய்க்கு  வாங்கியிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 02-04-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம். சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.


பல்க்கா வியாபாரம் நடந்திருக்கே!

02-04-18 அன்று நடந்த  ஒரு சில பல்க் டீல்கள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்)

உங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 03-04-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது!

எப்&ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்தனின் என்எஸ்சி சிம்பல்கள் தரப்பட்டுள்ளது. – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால்.
பங்குகள் எதுவும் இந்த வகையில் இல்லை.

இன்றைய போர்டு மீட்டிங்குகள் 

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):
HITECHGEAR, RSYSTEMS.
*****
பொறுப்பு கைதுறப்பு: இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும்.  இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை.  இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல.  பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html  எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்:  INH200001384)
 


டிரெண்டிங் @ விகடன்