வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (03/04/2018)

கடைசி தொடர்பு:10:59 (03/04/2018)

`ஏழுமலையான் பணம் 4,000 கோடி வங்கியில் டெபாசிட்' - தேவஸ்தான நிர்வாகம் விளக்கம்!

`ஏழுமலையான் பணம் 4,000 கோடி வங்கியில் டெபாசிட்' - தேவஸ்தான நிர்வாகம் விளக்கம்!

திருப்பதி கோயில் நிர்வாகம் சார்பில், இரண்டு வங்கிகளில் 4,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி கோவில்

உலகப் பிரசித்திபெற்ற தலமான திருப்பதி ஏழுமலையான் கோயில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்செய்கின்றனர். மேலும், நன்கொடைகள் அதிகமாகக் கிடைப்பதால், அவை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன.  அந்தவகையில் தற்போது, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திராவில் உள்ள இரண்டு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஏ.கே. சிங்கால் செய்தியாளர்களிடம் பேசும்போது,  ``திருப்பதி தேவஸ்தான பணத்தை டெபாசிட் செய்ய, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம் கோரின. இறுதியில், 7 புள்ளி 32 என்ற வட்டி விகிதத்தில் ஆந்திரா வங்கியில் 3 ஆயிரம் கோடி ரூபாயும், 7 புள்ளி 66 என்ற வட்டி விகிதத்தில் இண்டஸ் இண்ட் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது" என்றார். 

முன்னதாக, இந்த 4,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதற்குப் பதிலளித்த சிங்கால்,  ``ஏழுமலையான் நிதியில், 4,000 கோடி ரூபாய் முறைகேடு வெளியான செய்தி  தவறு. அவ்வாறு எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஏழுமலையான் வருமானத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தும் பணிகள் எதையும் அதிகாரிகள் செய்ய மாட்டோம்" என்றார். இதுவரை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வங்கிகளில் ரூ.9, 800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க