வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (03/04/2018)

கடைசி தொடர்பு:12:15 (03/04/2018)

பொய்யான செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர்களுக்கு ’செக்’ வைக்கும் மத்திய அரசு! #Fakenews

'பத்திரிகையாளர்கள் பொய்யான செய்திகளைப் பரப்பினால், அவர்களின் அங்கீகாரம் தடைசெய்யப்படும்'  என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர்கள்

தற்போது வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள்மூலம்,  தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.  'பத்திரிகையாளர்கள் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகவும்,  அவ்வாறு தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்பினால், பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் தடைசெய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதுபற்றிக் கூறிய மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒரு பத்திரிகையாளர் தவறான செய்தி பதிவிட்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டால், அவரின் செய்தி சரியானதா என இந்திய பத்திரிகையாளர்கள் கவுன்சில் மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் ஆகியவை உறுதிசெய்ய வேண்டும். ஒரு முறை தவறான செய்தியைப் பதிவுசெய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பத்திரிகையாளரின் அங்கீகாரம் 6 மாத காலம் ரத்துசெய்யப்படும். இரண்டாவது முறை மீறினால், ஒரு வருடம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் மற்றும் மூன்றாவது முறையும் அதே தவறு நடந்தால், நிரந்தரமாகப் பத்திரிகையாளரின் அங்கீகாரம் தடைசெய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, விரைவில் விதிகளை வகுக்க உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதற்காக, எதிர்வரும் காலத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சிக்கு என ஒரு தனி ஆணையம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.