வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (04/04/2018)

கடைசி தொடர்பு:14:00 (04/04/2018)

தவறான பாதையில் சென்றால் பஞ்சராக்கிவிடும் டயர் கில்லர்ஸ்! - கடும் எதிர்ப்பால் அகற்றம்

புனேவில் வாகனம் ஓட்டுபவர்கள் தவறான பாதையில் சென்றால் தானாக வண்டி டயர் பஞ்சராகும் வகையில் பொருத்தப்பட்டிருந்த கருவி நீக்கப்பட்டுள்ளது.

டயர் கில்லர்ஸ்

புனேவில் அமனோரா பார்க் பகுதியில் கடந்த மாதம் டயர் கில்லர்ஸ் கருவி சோதனைக்காகப் பொருத்தப்பட்டது, வாகன ஓட்டிகள் ஒரு வழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக புனே நகர மேலாண்மை இந்தக் கருவியை அமைத்தது. இதனால் சாலையின் மற்றொரு பகுதியில் வரும் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகும் வகையில், இது பொருத்தப்பட்டிருந்தது. இது சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருவி வேகத்தடை போலச் செயல்பட வேண்டும். ஆனால், இதன் மற்றொரு பகுதி முட்களுடன் உள்ளதால், இதன் மூலம் அதிக விபத்துகள் ஏற்பட வாய்புள்ளதாக புனே போக்குவரத்துக் காவலர்கள் நகர மேலாண்மையிடம் தெரிவித்தனர். காவலர்களின் வேண்டுகோளின்படி இந்த டயர் கில்லர்ஸ் அமனோரா பார்க் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.