இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,644.69 (+30.25) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 24,264.30 (+230.94) என்ற அளவிலும்  புதனன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது.  தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,332.90 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 68.02 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.

டாலரின் மதிப்பு ரூபாயில்

புதனன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 65.0232 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்

இன்று நிப்டி எப்படி இருக்க வாய்ப்பு?

இன்று  ரிசர்வ் வங்கியின் பாலிசி முடிவுகள் இருக்கின்றது.  இது குறித்த செய்திகள் வெளியாகும் போது சந்தையில் டெக்னிக்கல்களைத்தாண்டிய மூவ்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால் புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் இன்றைக்கு வியாபாரம் செய்வதை முழுமையாக தவிர்ப்பதே நல்லது எனலாம். 10020 என்ற லெவல்தனைத்தாண்டி சந்தை இறங்கும் பட்சத்தில் 9950 வரையிலும் சென்று விட வாய்ப்புகள் இருக்கின்றது. ஏற்றம் என்று பார்த்தால் 10220 என்ற எல்லையில் ரெசிஸ்டென்ஸ் உருவாகிவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது. எனவே ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களுமே ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடனும், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலுமே வியாபாரத்திற்காக சந்தையை ட்ராக் செய்யலாம். இறக்கம் தொடர்ந்தால் உடனடியாக டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து வியாபாரம் செய்யாமல் இருப்பதே நல்லது எனலாம். கடைசி இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே வியாபாரத்தினை முழுமையாக முடித்துக்கொள்வது இன்றைக்கு மிகமிக நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். செய்திகள் மீது கவனம் வையுங்கள். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னர் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

04-04-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை  என்று பார்த்தால் 4,449.95 கோடி ரூபாய்க்கு வாங்கியும்,  4,114.77 கோடி ரூபாய்  அளவிற்கு விற்றும் நிகர அளவாக 335.18 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்?

04-04-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால்  3,616.81 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,769.36 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 152.55 கோடி ரூபாய்க்கு  விற்றிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 04-04-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம். 

04-04-2018 அன்று வால்யூம் அதிகமாக நடந்த சில ஸ்டாக்குகள் – பத்து நாள் மூவிங் ஆவரேஜ் வால்யூமை விட அதிகமாய்

04-04-2018 அன்று சாதாரணமாக நடக்கும் வியாபாரத்தை விட அதிக எண்ணிக்கையில் வியாபாரமும்  சற்று அதிகமான விலை ஏற்றமும் நடந்த சில ஸ்டாக்குகள்

டெக்னிக்கலாக – கேண்டில்ஸ்டிக்  மற்றும்  டெக்னிக்கல் இண்டிக்கேட்டர் அடிப்படையில் சில ஸ்டாக்குகளின் நிலவரங்கள் – டெக்னிக்கல் டிரேடர்கள் மேலும் தாங்களாகவே இவற்றின் மற்றபல டெக்னிக்கல் சூழல்களை மேலும் நன்கு ஆராய்ந்த பின்னரே இன்றைக்கான டிரேடிங் திட்டங்களை வகுக்கவேண்டும்

ப்யூச்சர்ஸ் ஒப்பன் இண்ட்ரெஸ்ட் நிலவரம் – ஏப்ரல் மாத  எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில் 
ஏப்ரல் மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில் 04-04-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்). 

உங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 05-04-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது!

எப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள் எதுவும் இன்றைக்கு இல்லை.

இன்றைய போர்டு மீட்டிங்குகள் 

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):

GMBREW.
*****
பொறுப்பு கைதுறப்பு: இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும்.  இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றிற்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை.  இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல.  பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும் இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html  எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்:  INH200001384)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!