வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (05/04/2018)

கடைசி தொடர்பு:18:20 (05/04/2018)

சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்படும் அமைச்சர் அருண் ஜெட்லி?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரகப்பை பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

அருண் ஜெட்லி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகப்பை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அருண் ஜெட்லிக்கு இந்த வார இறுதியில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நோய்த்தொற்று ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை காரணமாக பொதுவெளியில் செல்வதை அவர் தவிர்த்து வருவதாகச் சொல்கிறார்கள். அதனால் வீட்டிலே தங்கியிருந்து இவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக இருந்த 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற்று அதில் உத்தரப்பிரதேச எம்.பி-யாக அருண் ஜெட்லி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு விழாவில் அருண் ஜெட்லி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.