வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (05/04/2018)

கடைசி தொடர்பு:18:51 (05/04/2018)

பங்குச் சந்தையில் மீண்டும் உற்சாகம்; நிஃப்ட்டி 197 புள்ளிகள் உயர்ந்தது 

இந்திய பங்குச் சந்தையில் இன்று மிகவும் உற்சாகமான மனநிலையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்ததன் காரணமாக

பங்குச் சந்தையில் மீண்டும் உற்சாகம்; நிஃப்ட்டி 197 புள்ளிகள் உயர்ந்தது 

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று மிகவும் உற்சாகமான மனநிலையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்ததன் காரணமாக மும்பை மற்றும் தேசியச் சந்தைகளின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸும் நிஃப்ட்டியும் நன்கு உயர்ந்து லாபத்துடன் முடிவடைந்தன.

இன்று ஆரம்ப முதலே பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் சந்தை இன்று வர்த்தக நேரம் முழுவதும் பாசிட்டிவாகவே பயணித்தது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 577.73 புள்ளிகள் அதாவது 1.75 சதவிகிதம் முன்னேறி 33,596.80 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 196.75 புள்ளிகள், அதாவது 1.94 சதவிகிதம் உயர்ந்து 10,325.15-ல் முடிவுற்றது.

சந்தையின் இன்றைய உயர்வுக்கு முக்கிய காரணங்கள் :

அமெரிக்க - சீன நாடுகளிடையே தொடங்கியிருக்கும் வர்த்தக யுத்தத்தை வளரவிடாமல் பேச்சு வார்த்தை மூலம் ஒரு காம்ப்ரமைஸ் கொண்டுவர இரு நாடுகளுமே தயாராக உள்ளதாக வரும் செய்திகளினால் ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் இன்று நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த திங்களன்று வங்கிகள் கடந்த அக்டோபர் - டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி - மார்ச் 2018 காலாண்டுகளின் பாண்ட் டிரேடிங் இழப்பை (Bond Trading Losses), அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான கணக்கில் ப்ரொவிஷன் செய்து கொள்ளலாம் என அறிவித்ததையடுத்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளை வாங்குவதில் தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று தன்னுடை மானிட்டரி பாலிசி அறிக்கையை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது போலவே வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போதைய நடப்பாண்டுக்கான முதல் அரையாண்டில் பணவீக்கம் பற்றிய முன்னறிவிப்பில் பணவீக்கம் முன்னர் எதிர்பார்த்ததை விட குறைவாக  4.7 சதவிகிதம் முதல் 5.1 சதவிகிதம் என்ற நிலையில் இருக்கலாம் என்று கூறியிருக்கிறது.  இரண்டாவது அரையாண்டில் அது 4.4 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்திருக்கிறது.

நாட்டின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி வேகம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என நம்புவதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

மேலும், சர்வீஸ் செக்டார் வளர்ச்சி மார்ச் மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக மார்க்கிட் எகானாமிக்ஸிடமிருந்து வந்த அறிக்கையும் சந்தையின் உற்சாக நிலைக்கு ஒரு காரணம்.

இன்று விலை ஏறிய சில பங்குகள் :

ஹிண்டல்க்கோ  6.5%
வேதாந்தா 5.6%
ஸ்டேட் பேங்க் 5.5%
பஜாஜ் பைனான்ஸியல் 5.2%
இந்தியாபுல்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் 4.5%
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3.7%

க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ், கோடக் பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், யு.பி.எல், யெஸ் பேங்க், லார்சென் & டூப்ரோ, எய்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், இந்தஸ்இந்த் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் 2.5 சதவிகிதம் முதல் 3.5 சதவிகிதம் உயர்ந்தன.

இன்று மும்பை பங்குச்சந்தையில் 2070 பங்குகள் விலை உயர்ந்தும், 631 பங்குகள் விலை குறைந்தும், 134 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.


டிரெண்டிங் @ விகடன்