வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (06/04/2018)

கடைசி தொடர்பு:12:49 (06/04/2018)

வேலைக்குச் சென்ற 9 பேரின் உயிரைப் பறித்த டிராக்டர்!

வேலைக்குச் சென்ற 9 பேரின் உயிரைப் பறித்த டிராக்டர்!

தெலங்கானா மாநிலத்தில், டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ளது படாமத்தி கிராமம். இன்று காலை இக்கிராமத்திலிருந்து சுமார் 30 தோட்டத் தொழிலாளர்கள் அருகில் உள்ள புலிச்செர்லா பகுதிக்கு விவசாயப் பணிகளுக்குச் சென்றுள்ளனர். 30 பேரும் தனியார் டிராக்டர் ஒன்றில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வாடிப்பட்லா கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது. இதில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மேலும் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குளத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மீட்புப் பணியில், தீயணைப்புத்துறையினருடன் கிராம மக்களும் ஈடுபட்டுள்ளனர். பலர் குளத்தில் மூழ்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க