ஒன்று சேர்ந்த ஆந்திரக் கட்சிகள்! - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் கூண்டோடு ராஜினாமா!

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

கடந்த பிப்ரவரி 1- ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை இதனால் மத்திய அரசு மீது ஆந்திர அரசு பெறும் அதிருப்தியில் இருந்தது. இது தொடர்பாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்துமே தோல்வியில் முடிந்தது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதைத் தொடர்ந்து தெலுங்கு தேச எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், பாஜக அரசுக்கு எதிராக ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்தது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆந்திராவின் அனைத்து எம்.பி-களும் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் எம்.பி-க்கள் அனைவரும் மக்களவை சபாநாயர் சுமித்ரா மஹாராஜனை நேரில் சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதனால் பாஜக அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் எதிரிக்கட்சிகளாக இருந்தன. ஆனால், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருவது ஆந்திர அரசியலில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!