வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/04/2018)

கடைசி தொடர்பு:07:33 (07/04/2018)

இந்தியா வந்தார் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி!

நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்தியா - நேபாளம் இடையேயான நல்லுறவுகளை முழுமையான வகையில் மேம்படுத்தி, இருதரப்பிற்கும் இடையே நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நேபாளப் பிரதமர், இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பன்னெடுங்காலமாக நட்புறவும், இருதரப்பு ஒத்துழைப்பும் நிலவுவதாக வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் நேபாளப் பிரதமரின் வருகை வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நேபாளப் பிரதமர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் பந்த்நகரில் அமைந்துள்ள ஜி.பி.பந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி செல்லவிருக்கிறார். அவருடன் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவும் இந்தியா வந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க