வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (07/04/2018)

கடைசி தொடர்பு:11:17 (07/04/2018)

சல்மான்கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி இடமாற்றம்

சல்மான்கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி இடமாற்றம்

மான் வேட்டையாடிய வழக்கில், நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சல்மான்கான்

மான் வேட்டையாடிய வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும், 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரை விடுதலைசெய்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம்  உத்தரவிட்டது. கடந்த இரு தினங்களாக சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தண்டனை பெற்றவுடன், உடனடியாக ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஜோத்பூர் கிளை நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், சல்மான்கான் வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி ரவீந்திர குமார், ஜோத்பூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரைச் சேர்த்து மொத்தம் 87 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ராஜஸ்தானில் ஏப்ரல் 20 தேதிக்கு மேல் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் முன்கூடியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் இட மாற்றத்தால், சல்மான் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.