வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (07/04/2018)

கடைசி தொடர்பு:12:46 (07/04/2018)

இனி ரயில் நிலைய உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி!

இந்திய ரயில்வே துறையின்கீழ் இயங்கும் கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்துள்ளது மத்திய அரசு. 

ஜிஎஸ்டி

நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) கடந்த ஆண்டு ஜீலை மாதம் 1-ம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி நாடுமுழுவதும் அனைத்து பொருள்களுக்கும் வரியை நிர்ணயித்தது மத்திய நிதியமைச்சகம். 5%, 12%,18% மற்றும் 28% என நான்கு பிரிவுகளின் அடிப்படையில் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருந்தது. அதில் அத்தியாவசிய பொருள்களின் ஜி.எஸ்.டி 5% என நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரயில் நிலையங்களில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி-யை சார்ந்த கேன்டீன்கள் மற்றும் பிளாட்பாரத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு 5 சதவிகிதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு.