வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (08/04/2018)

கடைசி தொடர்பு:04:45 (08/04/2018)

சோனியா காந்தி மூன்று நாள் ரஷ்யா பயணம்..!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மூன்று நாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். 

காங்கிரஸ் கட்சி மற்றும் பிரச்சாரங்களில் தற்போது அக்கட்சியின் ராகுல்காந்தி முழுவதுமாக ஈடுபட்டுவருகிறார். தற்போது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷியாவிலும் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனியா காந்தி நேற்று நள்ளிரவு ரஷியா புறப்பட்டு சென்றார். முதல் கட்டமாக மாஸ்கோ செல்லும் சோனியா, பின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.