Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டமைப்புத் திட்டங்களில் இணைந்து செயல்பட இந்தியா-நேபாளம் முடிவு!

பிரதமர் மோடி - நேபாளப் பிரதமர் சர்மா ஒலி

வேளாண்துறை திட்டங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்புத் துறைகளில் இணைந்து செயல்பட இந்தியாவும், நேபாளமும் சம்மதம் தெரிவித்துள்ளன. ரக்ஸாலில் இருந்து காத்மாண்டு வரை ரயில் பாதை இணைப்புக்கு பிரதமர் மோடி ஒப்புக்கு கொண்டிருப்பதுடன், நேபாள நாட்டின் துறைமுக இணைப்புக்கும் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விரிவான பேச்சுக்கள் நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்துவது என்றும், பாதுகாப்புத் துறை, சாலை இணைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்துவது என்றும் இரு தலைவர்களும் உறுதியளித்தனர். 

இந்தப் பேச்சுக்களுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நேபாள நாட்டின் முன்னுரிமைகளின் அடிப்படையில் அந்நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான இணைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, நேபாளத்தின் ஜனநாயகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல உதவும்" என்றார். 

இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பு, வேளாண்மை, எரிசக்தி, இருநாட்டு மக்களுக்கு இடையேயான பரஸ்பர தொடர்புகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட இந்த சந்திப்பின்போது ஒப்புக் கொண்டனர். 

இரு நாட்டு எல்லையான பிர்குஞ்ச் பகுதி நேபாளத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை இரு பிரதமர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.

தவிர, இதுபோன்ற மேலும் மூன்று சோதனைச் சாவடிகளை அமைக்க நேபாளத்திற்கு இந்தியா உதவும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மோதிஹாரி அம்லேக்கஞ்ச் பெட்ரோலியப் பொருட்கள் குழாய் திட்டத்தையும் இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர். 

இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையேயான பரஸ்பர நல்லுறவுகள் பல்வேறு வகைகளிலும் நீடிப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. சர்மா ஒலி கூறினார். தற்போது நேபாளத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவின் உதவி குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, நேபாள பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement