வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (08/04/2018)

கடைசி தொடர்பு:07:11 (09/04/2018)

மூளைச் சாவு மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் வெளிப்படைத் தன்மை! - புதிய விதிமுறைகளை வெளியிட்ட கேரளா

மூளைச் சாவு மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் வெளிப்படைத் தன்மை! - புதிய விதிமுறைகளை வெளியிட்ட கேரளா

உறுப்புமாற்று நடைமுறைகள் வெளிப்படையாக இருக்கும்  நோக்கில், ஒரு நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிப்பதற்கான வழிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது. 

கேரளா

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த வழிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம் செய்யப்படுவது மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்பாக மக்களுக்கு எழும் சந்தேகங்களைப் போக்கும் வகையில் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஷைலஜா, ``ஒரு நோயாளி மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவிப்பதற்கான வழிமுறைகளை நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளா வெளியிட்டுள்ளது. ஒரு நோயாளி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்த பின்னரே, அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த வழிமுறைகள் வெளியிடப்பட்டதன் முக்கிய நோக்கம். இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன’’ என்று அவர் தெரிவித்தார்.