சொத்துக்கணக்கை தாக்கல்செய்யாத ஐ.பி.எஸ் அதிகாரிகள்..! நடவடிக்கைக்குத் தயாராகும் மத்திய அரசு

சொத்துக்கணக்கை தாக்கல்செய்யாத ஐ.பி.எஸ் அதிகாரிகள்..! நடவடிக்கைக்குத் தயாராகும் மத்திய அரசு

இந்தியா முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இதுவரை தங்களது சொத்துக்கணக்கை தாக்கல்செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசின் 1968-ம் ஆண்டு சட்டவிதிகளின் படி, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்து விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, இந்த ஆண்டு சொத்துக்கணக்கை தாக்கல்செய்வதற்கான காலக்கெடு ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் அதிகாரிகள் சொத்துக்கணக்கை தாக்கல்செய்யாமல் இழுத்தடித்துவருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்கள்குறித்த அறிக்கையை அரசிடம் தாக்கல்செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 905 அதிகாரிகளில் 3 ஆயிரத்து 390 அதிகாரிகள் மட்டுமே கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை சொத்து விவரங்களைத் தாக்கல்செய்துள்ளனர். மீதம் உள்ள    500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இதுவரை சொத்து விவரங்களைத் தாக்கல்செய்யவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!