Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,613.16 (+8.70) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 23,979.10 (+46.34) என்ற அளவிலும் திங்களன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது.  தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,336.10 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 68.65 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.    

டாலரின் மதிப்பு ரூபாயில்

திங்களன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 64.9287 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்

இன்று நிப்டி எப்படி இருக்க வாய்ப்பு?

திங்களன்று சிறியதொரு ஏற்றத்துடன் நிப்டி முடிவடைந்தது. செய்திகளும் நிகழ்வுகளும் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்ற சூழலே தொடர்கின்றது.  செய்திகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் டெக்னிக்கல்கள் பெரிய அளவில் வொர்க் அவுட் ஆகாமல் போவதற்கான வாய்ப்புகளே இன்றைக்கும் அதிகம். எனவே டெக்னிக்கல் டிரேடர்கள் வியாபாரத்தின் அளவுதனை கணிசமாக குறைத்துக்கொண்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடனும் வர்த்தகம் செய்யவேண்டியிருக்கும். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை தவிருங்கள். கேப் ஒப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்யவேண்டும். கடைசி அரைமணி நேரத்திற்கு முன்னரே வியாபாரத்தினை முடித்துக்கொள்ளுங்கள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

09-04-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை  என்று பார்த்தால் 4,447.12 கோடி ரூபாய்க்கு வாங்கியும்,  5,748.05 கோடி ரூபாய்  அளவிற்கு விற்றும் நிகர அளவாக 1,300.93 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்?

09-04-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால்  3,523.36 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,164,01 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 359.35 கோடி ரூபாய்க்கு  வாங்கியிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 09-04-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம். 

டெக்னிக்கலாக – கேண்டில்ஸ்டிக்  மற்றும்  டெக்னிக்கல் இண்டிக்கேட்டர் அடிப்படையில் சில ஸ்டாக்குகளின் நிலவரங்கள் – 09-04-2018 டிரேடிங்கின் இறுதியில் உள்ள நிலை– டெக்னிக்கல் டிரேடர்கள் மேலும் தாங்களாகவே இவற்றின் மற்றபல டெக்னிக்கல் சூழல்களை மேலும் நன்கு ஆராய்ந்த பின்னரே இன்றைக்கான டிரேடிங் திட்டங்களை வகுக்கவேண்டும்

ப்யூச்சர்ஸ் ஒப்பன் இண்ட்ரெஸ்ட் நிலவரம் – ஏப்ரல் மாத  எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில் 
ஏப்ரல் மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில் 09-04-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்). 

உங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 10-04-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது!

எப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:

JETAIRWAYS.

இன்றைய போர்டு மீட்டிங்குகள் 

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):


CELESTIAL, LGBFORGE, MRPL, VESUVIUS, WSI.
*****
பொறுப்பு கைதுறப்பு: இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும்.  இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றிற்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை.  இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல.  பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும் இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html  எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்:  INH200001384)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement