Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`நீலம் காவியானது!’ - அம்பேத்கரின் அடையாளத்தை மாற்றிய உ.பி அரசு

அம்பேத்கர் சிலையை முழுவதுமாகக் காவி நிறத்தில் வடிவமைத்திருப்பதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது உத்தரப்பிரதேச அரசு.

அம்பேத்கர் சிலை
 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றைச் சீரமைக்கும் பணிகளில் மாநில அரசு மும்முரம் காட்டி வருகிறது. உ.பி-யில் படாவுன் நகரத்தை ஒட்டியுள்ள துக்ரைய்யா கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலை சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது. கிராம மக்கள் அம்பேத்கர் சிலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று படாவுன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.

இந்நிலையில், சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நேற்று ஆக்ராவிலிருந்து துக்ரைய்யா கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிலையைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ந்துபோனார்கள். காரணம் நீல நிறமாக இருந்த அம்பேத்கர் சிலைக்கு முழுவதும் காவி நிற பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. அம்பேத்கரின் கோட்டுக்கும் காவி வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. கழுத்திலும் காவி நிற மாலை போடப்பட்டிருந்தது. 

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசுப் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிக்கூட பைகள், பேருந்துகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்தும் காவி வண்ணத்துக்கு மாற்றப்பட்டது. லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவருக்கும் காவி வர்ணம் பூசி சர்ச்சையை ஏற்படுத்தினர். தற்போது அம்பேத்கர் சிலைக்கு காவி வண்ணம் பூசி அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது யோகி தலைமையிலான அரசு! 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement