`விரைவில் இந்தியா சூப்பர் பவராக மாறும்' - ஜனாதிபதி ராம்நாத் நம்பிக்கை!

'இந்தியா, பொருளாதாரத்தில் சூப்பர் பவராக விரைவில் மாறும்' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

ராம்நாத் கோவிந்த்

6 நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளார், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். கடந்த 7-ம் தேதி கினியா சென்ற அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.  அதன்பிறகு, அங்கிருந்து சுவாசிலாந்து சென்றார். சுவாசிலாந்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் உரை நிகழ்த்தினார். இதன்மூலம், சுவாசிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார். பின்னர், அங்கிருந்து ஜாம்பியா நாட்டுக்குச் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

லுசாகா நகரில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,  ``உலக நாடுகளில் இந்தியா, தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவருகிறது. இதேநிலை நீடித்தால், விரைவில் இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக மாறும். வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுடன் உறவுகளை வலுப்படுத்த மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இந்திய மற்றும் ஜாம்பியா இடையேயான பாலமாக இந்தியர்கள் உள்ளனர். இங்கு வாழும் இந்தியர்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!