நடுரோட்டில் ஆலுமா.. டோலுமா பாட்டுக்கு ஆட்டம் போட்ட மாநகராட்சி அதிகாரிகள்..!

தன்னுடன் பணிபுரியும் சக அதிகாரிகளுடன் உயர் அதிகாரி ஒருவரில் நடுரோட்டில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ளது கயாத்நகரின் மாநகராட்சி. இதன் உயரதிகாரியாக இருப்பவர் திருமலா ரெட்டி. இவர் நேற்று தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் இரண்டு கார்களில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீசைலம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, அனைவரும் காரை விட்டு இறங்கினர். 

அப்போது திடீரென பாடல்களை ஒலிக்கவிட்டு நடுரோட்டில் நடனம் ஆடத் தொடங்கினர். நடுரோடு என்றுகூட பாராமல் நடிகர் அஜித்தின் ஆலுமா.. டோலுமா உள்ளிட்ட பாடல்களுக்கு அதிகாரிகள் விடாமல் ஆட்டம் போட்டனர். வாகனங்கள் அதிகம் செல்லும் நெடுஞ்சாலையை மறித்து நடனம் ஆடியது மக்களுக்கு சொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுவதுடன் பலரும் மாநகராட்சி அதிகாரிகளின் செயல்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!